கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை
கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி - 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று(25.10.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. குறித்த அழைப்பின் பின்னர் அந்த நபர் கடையை விட்டு மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார்.
சற்று நேரத்தில் சத்தம் கேட்டதுடன் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடியுள்ளதாகவும் இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் கட்டையால் தாக்கப்பட்டு அந்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் மரணம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

என் பிள்ளைகள் எனக்கு வேண்டும்... கர்நாடகா குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவர் கோரிக்கை News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
