வவுனியாவில் கடும் மழை - மின்னல் தாக்கி இளைஞர் பரிதாப உயிரிழப்பு
வவுனியா - செக்கட்டிப்புலவு பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (01.10.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை வேளையில் பெய்த கடும் மழையின்போது, மைதானத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மழைக்காக சற்று ஒதுங்கி மரத்தின் கீழ் நின்றுள்ளார்.
மின்னல் தாக்கி உயிரிழப்பு
இதன்போது அவர் மீது மின்னல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வவுனியா, செக்கட்டிப்புலவு பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஜோசப் அன்ரணி என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக வவுனியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.