யாழில் வைத்தியரின் வீட்டில் கைவரிசை காட்டிய இளைஞர்!
யாழ்., கொழும்புத்துறை - இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியரின் வீட்டில் இரவு வேளையில் திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களான ஐபாட் மற்றும் இரண்டு ஐ போன்கள் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் அரியாலையைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியர் வீட்டில் வசித்து வரும் நிலையில் அவர்கள் இரவுச் சாப்பாட்டை எடுத்துக்கொண்ட போதும் வீட்டின் முன் கதவைத் திறந்து ஐபாட், 2 ஐபோன்கள் மற்றும் சவுண்ட் சிஸ்ரம் என்பன திருடப்பட்டன.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து ஐபாட் மற்றும் இரண்டு ஐ போன்கள் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan