வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் உயிரிழப்பு
கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா - ஓமந்தை, அரச வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் இளைஞர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதமானது ஓமந்தை, அரச வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் பயணித்தபோது தண்டவாளப் பகுதியில் பயணித்த இளைஞர் மீது மோதியுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் புகையிரதத்தில் எடுத்துச் செல்லப்பட்டு ஓமந்தை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் ஓமந்தை அரச வீட்டுத் திட்டம் 6 ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த 21 வயதுடைய சுந்தரமூர்த்தி சுதன் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தற்கொலை முயற்சியா அல்லது விபத்தா என்ற கோணத்தில் ஓமந்தை
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri