முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விசுவமடுப் பகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் நேற்று (14.12.2022) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூங்கிலாறு வடக்கு, உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வரும் 17 வயதுடைய இளைஞர், குடும்ப கஷ்டம் காரணமாக விசுவமடு, 10ஆம் கட்டைப் பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

தொழில் கருவிக்கு மின் இணைப்பை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனை
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இளைஞரின் சடலம், சக இளைஞர்களால் மீட்கப்பட்டு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு
எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam