புதுக்குடியிருப்பு விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞனும் உயிரிழப்பு
புதுக்குடியிருப்பில் கடந்த 25.09.2025 அன்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்றையதினம்(29) உயிரிழந்துள்ளார்.
கடந்த 25.09.2025 அன்று புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இளைஞன் பலி
இந்த விபத்தில் புதுக்குடியிருப்பு செம்மலை பகுதிகளை சேர்ந்த புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் தனியார் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்தநிலையில் நேற்றையதினம்(29) 21 வயதுடைய விஸ்னுயன் என்ற இளைஞன் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் 5பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



