இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை! தம்பதியினர் கைது
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயதான இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பிரதேசத்தை 27 வயதுடைய நபரும், 23 வயதான அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக மேலும் மூவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அடையாளம் தெரியாத நபர்
தனிப்பட்ட பிரச்சினை காரணமாகத் தாக்குதலுக்கு உள்ளாகிக் காயமடைந்த இளைஞன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
குறித்த இளைஞர் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி அதிகாலை 05 மணியளவில் அவசர பிரிவிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் இளைஞனின் கழுத்து மற்றும் காலில் தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மற்றும் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகம், மெதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில், பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா




