கிளிநொச்சியில் பாதையை புனரமைக்க ஒன்று திரண்ட இளைஞர்கள்
கிளிநொச்சி கண்டவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியில் அமைந்துள்ள பாலம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரம் பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு கிரவல் மூலம் இன்றைய தினம் (16.07.2023) இந்த புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் தமது சொந்த நிதியினையும்,நேரத்தினையும், ஆளணியையும் பயன்படுத்திச் சேதமடைந்த பகுதிகளைப் புனரமைப்பு செய்துள்ளனர்.
புனரமைப்பு பணிகள்

கிளிநொச்சி கண்டவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியில் அமைந்துள்ள பாலமானது சில வருடகாலமாகப் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
இதனால் மக்கள் தற்காலிக பாதையினை பயன்படுத்தி வந்தனர்.
குறித்த தற்காலிக பாதையும் மக்கள் பயணிக்கமுடியாத நிலையில் சேதமடைந்துள்ளது.
மேலும், பாலத்தின் அபிவிருத்தி பணிகளை நிறைவு செய்து தருமாறு பல தடவைகள் முறையிட்டபோதும் திருத்தப்படவில்லை.
இந்த நிலையில் இந்த இளைஞர்களின் பாலம் புனரமைப்பு செய்தமைக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.






| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |