டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு : ஒரே நாளில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Batticaloa Sri Lanka Ministry of Health Sri Lanka Dengue Prevalence in Sri Lanka
By Bavan Feb 19, 2023 04:43 AM GMT
Report

மட்டக்களப்பு - ஏறாவூரில் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி, போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதான இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் ஐயங்கேணி பாரதி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பகிரதன் தனுஷ்கரன் என்பவரே நேற்றைய தினம் (18.02.2023)  மரணமடைந்துள்ளார் என மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் மருத்துவர் குனசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் டெங்கு காய்ச்சலுக்குள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 16ஆம் திகதி மட்டு. போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு : ஒரே நாளில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி | Youth Dies Of Dengue Fever

தீவிர சிகிச்சைப் பிரிவில்

இதேவேளை, தற்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் காரணத்தால் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளதுடன், நேற்று முன்தினம் (17.02.2023) மட்டும் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தினால் களுவாஞ்சிக்குடியில் 2 பேரும், காத்தான்குடியில் ஒருவரும், செங்கலடியில் 2 பேரும், வாழைச்சேனையில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தியில் 4 பேரும் மட்டக்களப்பில் 4 பேர் உட்பட 14 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் வீட்டில் ஒரு நுளம்பைக் கண்டாலும் சுற்றுப்புறச்சூழலைத் துப்பரவு செய்யுங்கள், காய்ச்சல் ஏற்பட்டால் அரச வைத்தியசாலைக்குச் சென்று உடனடியாகவே மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள், காய்ச்சல் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தால் இரத்தப்பரிசோதனை செய்யுங்கள், காய்ச்சலுக்கு பரசிட்டமோலை தவிர வேறு மருந்துகளை ஒருபோதும் பாவிக்காதீர்கள்.

ஆகவே 'ஒரு நுளம்பு உன்னை நாளைக் கொல்லும் நீ அதை இன்றே கொல்லாவிடில்' என்பதனை மனதில் நிறுத்திக் கொண்டு பொதுமக்கள் தமது சுற்றுச் சூழலைச் சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் டெங்கு நுளம்பு தொடர்பாக எச்சரிக்கையுடன் அவதானத்துடன் செயற்படுமாறும் மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் மருத்துவர் குனசிங்கம் சுகுணன் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US