வடமராட்சியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி
வடமராட்சியில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மந்திகை மடத்தடி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக சிகிச்சை
அவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிககப்பட்ட நிலையில் இன்றைய தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன், நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
விசாரணைகள்
அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் பிரணவன் வயது 25 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam