திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மக்களால் பிடிபட்ட இளைஞர்!(Photo)
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அடம்பன் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் மக்களால் பிடியுண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (20.11.2022) பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் தொடர்ச்சியாக ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பணப்பைகளை திருடுவதும் ஆலய பகுதியில் உள்ள கிராமத்தில் மக்களின் வீடுகளில் திருடுவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளார்.

பொலிஸாரிடம் ஒப்படைப்பு
இந்த நிலையில் நேற்று (20.11.2022) மக்களினால் ஆலய வளாகத்தில் வைத்து இளைஞரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்களை உடைத்து பணம் தேடுவதும் அவர்களின் உடமைகளை திருடுவது தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கோயில் வளாகத்தில் வாகனம் ஒன்றை உடைத்து திருட முற்பட்ட போது மக்கள் அவரை துரத்திச் சென்றபோது தப்பிச் சென்றுள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri