சட்டவிரோத பொருட்களுடன் இளைஞரொருவர் கைது
மன்னார்-பேசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் கேரள கஞ்சாவை முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லும் போது இளைஞரொருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பேசாலை- எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் எனவும் ,பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியில் கஞ்சா போதைப்பொருள் கொண்டு செல்லப்படுவதாக மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பேசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது 6 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், முச்சக்கர வண்டிக்கு பாதுகாப்பு வழங்கிய சந்தேகநபரொருவரை பொலிஸார் நிறுத்திய போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குறித்த மோட்டார் சைக்கிளை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை விசாரணையின் பின்னர் நாளைய
தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ,விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாகவும் பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
