முல்லைத்தீவில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு - தேராவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த இளைஞர் சிக்கியுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 21 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
23 வயது இளைஞர் கைது
சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய தேராவில் விசுவமடு பகுதியினை சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞரையும், சான்று பொருட்களையும் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைத்தில் பாரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸார் இளைஞரையும் சான்று பொருட்களையும் இன்று (03.02.2024) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது சந்தேகநபரை எதிர்வரும் 13.02.2024 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
