10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
மாத்தளை - மஹாவெல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது நபர் ஒருவரிடம் 10,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கடமை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த பிரதேசத்தின் போக்குவரத்து கடமையின் போது வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இன்றி வாகனம் செலுத்திய நபருக்கு அபராதப்பத்திரம் குறைந்த தொகையில் வழங்குவதாக கூறி இந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் 10,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் இலஞ்ச ஒழிப்பு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 23 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
