தென்னிலங்கையில் கோரம்: கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் கொலை
களுத்துறை - மத்துகம பகுதியில் கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவமானது இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய எம்.கலன என பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இன்று அதிகாலை அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், பலத்த காயமடைந்த குறித்த நபர் களுத்துறை - நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 21 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam