வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை (Sammanthurai) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மலையடிக்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைதாகியுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |