சிறுமிக்கு தவறான காணொளிகள் அனுப்பிய சிப்பாய் கைது
பதின்மூன்று வயதுச் சிறுமியொருவரை அச்சுறுத்தி, அவரது தொலைபேசிக்கு தவறான காணொளிகள் அனுப்பிவந்த இராணுவச் சிப்பாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றையதினம்(05.01.2025) அநுராதபுரம், தந்திரிமலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியை அச்சுறுத்தி அவரது கைத்தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ள சிப்பாய், தவறான காணொளிகள் மற்றும் குறுந்தகவல்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

தந்திரிமலை இராணுவ முகாமில் பணியாற்றும், பராக்கிரமபுர பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஶ்ரீபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam