உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா இலங்கையில் - ஜனாதிபதியின் பணிப்புரை

Anura Kumara Dissanayaka Sri Lanka
By Rakesh Feb 26, 2026 12:26 AM GMT
Report

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா மற்றும் 11 ஆவது பொதுச் சபையின் 2 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம், எதிர்வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரை இலங்கையில் நடைபெறவுள்ளன.

அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்றுமுன்தினம்(24) செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்: பிள்ளையான் - சுரேஸ் சாலே அடுத்தது யார்..!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்: பிள்ளையான் - சுரேஸ் சாலே அடுத்தது யார்..!

ஜனாதிபதி பணிப்புரை

உள்நாட்டு, வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கு தேவையான அரச அனுசரணை வழங்க புத்த சாசன அமைச்சர், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதிநிதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா இலங்கையில் - ஜனாதிபதியின் பணிப்புரை | 60Th Anniversary World Buddhist Sangha Federation

1966 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச பௌத்த அமைப்பின் விழாவை, அது நிறுவப்பட்ட நாட்டில் நடத்துவது ஒரு தனித்துவமான மைல்கல் என்று ஏற்பாட்டுக் குழு சுட்டிக்காட்டியது.

தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ராயனம் ஆகிய அனைத்து பௌத்த மரபுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள், இந்த நிகழ்வுக்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், மூன்று நிகாயாக்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உட்பட 500 இந்நாட்டுத் தேரர்களின் பங்கேற்புடன் இந்த விழா நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கு பூட்டான் மன்னர் உட்பட பௌத்த நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சாலே - பதற்றத்தில் ராஜபக்‌சக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்

பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சாலே - பதற்றத்தில் ராஜபக்‌சக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்

 சமய அனுஷ்டானங்கள்

இதன் ஆரம்ப நிகழ்வு, நவம்பர் 28 ஆம் திகதி கொழும்பு, நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தில் நடைபெறும். நிறைவேற்றுக் குழுக் கூட்டம் மற்றும் கல்வி மாநாடு நவம்பர் 29 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா இலங்கையில் - ஜனாதிபதியின் பணிப்புரை | 60Th Anniversary World Buddhist Sangha Federation

உலக அமைதிக்காக அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நவம்பர் 30 ஆம் திகதி மாலை நடைபெறும். டிசம்பர் முதலாம் திகதி ருவன்வெளி சேய மற்றும் கண்டி தலதா மாளிகையை மையமாகக் கொண்டு சமய அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

“வஸ்” காலம் முடிந்த பிறகு நடைபெறும் இந்த விழா, இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சி குறித்து உலகிற்கு சிறந்த செய்தியை வழங்கும் என்றும், நாட்டின் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கு பெரிதும் பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு நிறைவு நிகழ்வை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏற்பாடு செய்வதன் அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அரசு முழு ஆதரவையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நியமிக்கப்படும் விசேட குழுவினால் அரசாங்கத் தரப்பு மற்றும் ஏற்பாட்டுக் குழு நிறைவேற்ற வேண்டிய பணிகளை உடனடியாக அடையாளம் கண்டு, எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் மூலம் இலங்கையின் விருந்தோம்பல் குறித்து மிகவும் சிறந்த செய்தியை முழு உலகிற்கும் எடுத்துக்காட்ட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் ‘எப்ஸ்டன் கோப்புகள்’- அதிர்ச்சிதரும் ஆதாரங்கள்! அம்பலப்படுத்தப்பட்ட விடயங்கள்..

இலங்கையின் ‘எப்ஸ்டன் கோப்புகள்’- அதிர்ச்சிதரும் ஆதாரங்கள்! அம்பலப்படுத்தப்பட்ட விடயங்கள்..

இராஜதந்திர அழைப்பு

வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்நாட்டிற்கு வருகை தரும்போதும், புறப்பட்டுச் செல்லும்போதும் விமான நிலையத்தில் சிறப்பு நுழைவாயில்களை நிறுவுதல் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா இலங்கையில் - ஜனாதிபதியின் பணிப்புரை | 60Th Anniversary World Buddhist Sangha Federation

மேலும், நிகழ்ச்சி நடைபெறும் நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்திற்குச் சென்று, அதன் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, உலகின் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக முறையான இராஜதந்திர அழைப்புகளைச் செய்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியை உலகிற்கு மீண்டும் உறுதிப்படுத்தவும், நாட்டின் கௌரவத்தை அதிகரிக்கவும் இந்த நிகழ்வு வழங்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் உப தலைவர், கலாநிதி வண, அக்குரெட்டியே நந்த நாயக்க தேரர், நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாக் குழுவின் தலைவர் கலாநிதி வண, போதாகம சந்திம நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US