புகைப்படத்தில் இருக்கும் மாணவியை தெரிந்தால் அழையுங்கள்! உதவி கோரும் பொலிஸார்
காணாமல் போயுள்ள 16 வயது பாடசாலை மாணவியொருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த மாணவி காணாமல் போயுள்ளதாக பதுளை எட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனவரி 3ஆம் திகதி முதல் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவி
சிறுமியின் தாயார் இது தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதுடன், காணாமல் போன சிறுமி சுமார் 5 அடி 2 அங்குல உயரமும் சாதாரண உடலமைப்பும் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இறுதியாக வெளிர் பச்சை நிற, நீளமான சட்டை அணிந்திருந்ததாகவும், அவரது இடது கையின் முழங்கைக்கு அருகில் சிறிய வெட்டு காயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
பொறுப்பதிகாரி - எட்டாம்பிட்டிய - 0718591528
எட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையம் - 0552295466
You may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri