முல்லைத்தீவில் போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞர் கைது
முல்லைத்தீவில் போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றையதினம் (08.10.2023) கைதாகியுள்ளார்.
முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருளுடன் குறித்த இளைஞர் சிக்கியுள்ளார்.
20 வயது இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட குறித்த நபர் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து 486 காெக்கேன் போதை மாத்திரைகளும், 34 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர் நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகல் கடிதத்தில் நீதிபதி சரவணராஜா தெரிவித்துள்ள விடயம்! நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை(Photos)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
