யாழ் நோக்கி வந்த தனியார் பேருந்தில் வெடி மருந்து! இளைஞன் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று (25.07.2024) பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவர் வெடிமருந்துகளை கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பேருந்து சோதனையிடப்பட்டது.
அதன்போது, பேருந்தில் இருந்து 01 கிலோ கிராம் வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, அதனை கொண்டு வந்த அரியாலை பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri