யாழில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளி
யாழ்ப்பாணம் (Jaffna), ஆரியகுளம் பகுதியில் முன்னாள் போராளியான சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆரியகுளம் சந்திக்கு அருகாமையிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே அவர் இன்று (25.07.2024) காலை சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் இருவர் தங்கியிருந்த நிலையில், அதில் ஒருவரான குறித்த நபருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் போராளியும் ஊடகவியலாளரும் வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்திரிகை எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறைகளிலும் அவர் கால் பதித்தவர் ஆவார்.
ஆழ்ந்த கவலை
வன்னியில் புனிதபூமி சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பாடசாலைப் படிப்பையும் முடித்து நிதர்சனத்தில் அவர் பணி புரிந்துள்ளார்.
அத்துடன், அவர் வடக்கு போர்முனை பயிற்சி ஆசிரியராக இருந்து இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட
செஞ்சுடரின் சகோதரரும் ஆவார்.
நிமிர்வு, சமூகம் ஊடகம், எழுநா உள்ளிட்ட ஊடகங்களிலும் அவர் ஊடகவியலாளராகப்
பணியாற்றியுள்ளார்.
மேலும், ஊடகப் பணிகளை அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்யும் ஊடகத் தோழமையின் திடீர் இழப்பு ஊடகத்துறை சமூகத்தினருக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக தகவல் - ராகேஷ் மற்றும் கீதன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
