திருகோணமலையில் தனியார் வைத்தியசாலைகள் சுற்றிவளைப்பு
திருகோணமலை(Trincomalee) - கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் காலாவதியான மருந்து பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆறு தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பானது கடந்த 12ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10 வருட தண்டனை
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (24)வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மீண்டும் இந்த குற்றத்தை செய்தால் 10 வருட தண்டனை வழங்கப்படும் என நீதிமன்ற நீதவான் மன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த சுற்றிவளைப்பானது கிண்ணியா பழைய இலங்கை வங்கி வீதி, கிண்ணியா நகர சபை வீதி மற்றும் கிண்ணியா அல்அக்சா வீதி உள்ளிட்ட வீதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam