தமிழர் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட அவுஸ்திரேலிய நிறுவனத்தின் இரகசிய நகர்வு
புதிய இணைப்பு
மன்னார் (Mannar) தீவின் கனிய வளங்களை அகழ்வதற்கு கடந்த 2, 3 வருடங்களாக அவுஸ்திரேலியாவை (Australia) சேர்ந்த தனியார் நிறுவனமொன்று இரகசிய நகர்வுகளை மேற்கொள்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பிலான கூட்டங்கள் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சார்ள்ஸ் எம். பி தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தி தொடர்பில் எமது ஊடகபிரிவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பின்போது அவர் இதனை கூறியுள்ளார்.
தாம் நாடாளுமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், அமைச்சர்களுடன் மேற்கொண்ட விசேட பேச்சுவார்த்தையின் காரணமாகவும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
மன்னார் (Mannar) தீவின் கனிய வளங்களை அகழ்வதற்கு கடந்த 2, 3 வருடங்களாக அவுஸ்திரேலியாவை (Australia) சேர்ந்த தனியார் நிறுவனமொன்று இரகசிய நகர்வுகளை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (23.07.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“மன்னார் மாவட்டத்தில் கனிய வளங்களை அகழ்வதற்கு பல முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அரசாங்கமும் உடந்தையாக உள்ளது.
ஒரு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் அந்த மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், மன்னார் மாவட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை மீறி இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |