இரவு நேரங்களில் தவிக்கும் மக்கள் - நீண்ட தூரம் நடந்து செல்லும் பரிதாப நிலை
மேல் மாகாணத்தில் இரவு வேளையில் பிரதான நகரங்களில் இருந்து புறநகர் பகுதிகளுக்கான பேருந்து சேவைகள் இயக்கப்படாமையால் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தெரிவு செய்யப்பட்ட பாதைகளுக்கு இரவு 9 மணி முதல் 12 மணி வரை பேருந்து சேவைகளை பயன்படுத்துமாறு மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையிடம் நேற்று எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று ஏனைய மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்படும்.
தவிக்கும் மக்கள்
அதற்கமைய, இரவு 9 மணி முதல் 12 மணி வரை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த பேருந்து உரிமையாளர்கள் தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது பல பகுதிகளில் இரவு 7 மணிக்குப் பிறகு நகரத்திலிருந்து செல்ல பேருந்துகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் 28 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பேருந்து கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் 300 முதல் 400 ரூபாய் வரை செலவழித்து வாடகை வாகனங்களில் பயணிக்க வேண்டியுள்ளது.
இதன் காரணமாக அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணம் செலுத்த முடியாமையினால் நீண்ட தூரம் நடந்து செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
