யாழில் போதைப்பொருள் தயாரிக்கும் இடம் முற்றுகை
யாழில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த இடம் இன்று (8) யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, வண்ணார் பண்ணை சிவன் கோயிலுக்கு பின் வீதியான மானிப்பாய் வீதிக்கு அண்மித்த ஒரு வீட்டில் வைத்து கஞ்சா கலந்த மாவா பாக்கு தயாரித்து கொண்டிருந்த பொழுது யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்.போதை ஒழிப்பு பிரிவும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, கஞ்சா கலந்த 4 கிலோ 250கிராம் எடையுள்ள மாவா பாக்கு, 12 கிலோ 500 கிராம் எடையுடைய பீடித்தூள் மற்றும் 24ரின் வாசனைத் திரவியம் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, 24 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணையினை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
