வெளிநாட்டிற்கு பொதிகளை விநியோகம் செய்யும் புதிய ஈ.எம்.எஸ் முறைமையை நாடளாவிய ரீதியில் அறிமுகம்
இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வெளிநாட்டிற்கு பொதிகளை விநியோகம் செய்யும் புதிய ஈ.எம்.எஸ் முறைமையை நாடளாவிய ரீதியில் அறிமுகம் செய்துவருகின்றது.
அதன் அடிப்படையில் நுவரெலியா அஞ்சல் அலுவலகத்திலும் (08) ஈ.எம்.எஸ் பரிமாற்ற செயற்பாட்டினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர்.
இதன் முதற்கட்டமாக நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தில் தொழில் புரியும் ஊழியர்கள் இணைந்து பொது மக்களுக்கு தெளிவூட்டல் தகவல்கள் உள்ளடக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.
இவ்வாறு அறிமுகம் செய்த ஈ,எம்.எஸ் பொதிகள் விநியோகமானது வெளிநாட்டில் உள்ள உறவுகளுக்கு மிகக் குறைந்த விலையில் மிகவும் பாதுகாப்பாக மிக விரைவாக பரிமாற்றம் செய்துகொள்ள முடியும் எனவும் மேலதிக உதவிகளுக்காக 1950 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த முறையை நுவரெலியாவில் சந்தைப்படுத்தும் குழுவிற்காக தனியான வட்ஸப் செயலியில் பயன்படுத்த கியூ ஆர் (Quick Response) குறியீடு ஒன்றினையும் வெளியீடு செய்துள்ளனர்.
வவுனியா
இதேவேளை, வவுனியா மாவட்டத்திற்கான நிகழ்வு வவுனியா பிரதான தபால் நிலையத்தில் இன்று (08.03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச் செய்யட்பாட்டினை மக்களுக்கு தெளிவு படுத்தும் முகமாக வவுனியா தபால் ஊழியர்களினால் வவுனியா நகரப் பகுதியில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றதோடு துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டுள்ளது.
இவ் நிகழ்வில் வவுனியா மாவட்ட அஞ்சல் அத்தியட்ஸகர் உட்பட தபால் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். நாடு தழுவிய EMS (Express Mail Service) ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம் இன்று யாழ்ப்பாணம் அஞ்சல் அலுவலகத்திலும் இடம்பெற்றது.
மேலதிக தகவல்: திலீபன்
யாழ்ப்பாணம்
இன்று காலை யாழ்ப்பாண பிரதேச அஞ்சல் அத்தியச்சகர் S.A.D.பெர்ணாந்து தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
மேலதிக தகவல்; தீபன்
திருகோணமலை
EMS விற்பனை ஊக்குவிப்பு திட்ட நிகழ்ச்சியானது இலங்கை தபால் திணைக்களத்தினால் திருகோணமலை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கே.எம்.எஸ் நாமல் குமார அவர்களின் தலைமையில் இன்று (08) திருகோணமலை மாவட்ட அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டு அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அஞ்சல் அலுவலகத்தில் இருந்து நடந்து சென்று, துண்டு பிரசுரங்களை விநியோகித்தது மட்டுமன்றி EMS சேவை குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தினர்.
திருகோணமலை நகரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை இலக்காகக் கொண்டு இந்த விற்பனை ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தபால் பொருட்களை துரிதமாகவும் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கும் கொண்டு செல்வதற்கு உருவாக்கப்பட்ட சேவையே இதுவாகும். தற்போது இலங்கை உள்ளிட்ட 48 நாடுகள் இந்த EMS முறையில் பொருட்களைப் பரிமாற்றிக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: கியாஸ் ஷாபி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |