சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
2026ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15ஆம் திகதி பதிவாகியுள்ளதுடன், அன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,483 ஆகும் எனவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகை
இந்த 22 நாட்களுக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா காணப்படுவதுடன், அந்த எண்ணிக்கை 35,177 ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 19,930 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 19,893 பேரும் மற்றும் ஜேர்மனிலிருந்து 12,822 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 10 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan