மட்டக்களப்பில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட இளைஞர் கைது (Photo)
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் நீண்ட நாட்களாக வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட 24 வயதுடைய இளைஞரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன், களவுகளுக்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் 4 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
குறித்த பொலிஸ் பிரிவில் நீண்ட நாட்களாக வீடுகள் உடைத்து கொள்ளையிடப்பட்ட
சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டன.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் கொள்ளையிடப்பட்ட 6 எரிவாயு கொள்கலன்கள், ஒரு சிடி பிளோயர், தங்கதோடு இரண்டுசோடி, குழந்தைகளின் மோதிரங்கள், 6 ஆயிரத்து 500 ரூபா பணம் போன்ற பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






