கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்
மினுவாங்கொடை பகுதியில் கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இளைஞர்களிடமிருந்து சந்தேகநபர் ஐந்து கோடி ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மோசடியில் சிக்கியவர்கள்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இளைஞர்களிடம் மோசடி செய்த பணத்தை மீளப்பெற்றுக்கொடுக்குமாறு உத்தரவிட்ட பிரதான நீதவான், பிணை கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்றும் அறிவித்துள்ளார்.
சந்தேகநபரின் மோசடியில் சிக்கியவர்கள் நாடு முழுவதிலும் இருப்பதாகவும், மேலதிக முறைப்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan