சமூக ஊடகங்களில் பரவி வந்த இளம் பெண்களின் காணொளி - அதிரடியாக கைது செய்த பொலிஸார்
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்தி சமூக வலைதளங்களில் காணொளியை பதிவிட்ட யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று யுவதிகளின் காணொளி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளது.
ஸ்டாலின் குரல் ஒலிக்காத சட்டசபை..! 39 ஆண்டு வரலாற்றில் சரிந்த திமுகவின் கோட்டை - அதிர்ச்சியில் தொண்டர்கள்
பொலிஸார் விசேட விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்திருந்த நிலையில், தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று யுவதிகளையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற யுவதியையும், அந்த மோட்டார் சைக்கிளையும் மொனராகலை, புத்தல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஹிதிகிவுல, உனவடுன மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
மோட்டார் சைக்கிளை செலுத்திய யுவதியிடம் சாரதி உரிமம் கூட இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த யுவதி இன்று (11) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri