கொழும்பின் புறநகர் பகுதியில் குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்
கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானை, சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் மேல் மாடியில் அமைந்துள்ள மின்தூக்கி கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பில் வசிக்கும் மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் களுத்துறை, வஸ்கடுவ பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் சந்தேகம்
குறித்த பெண் அவரது காதலனே கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பெண் மற்றும் காதலனுக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் மோதல் குறித்து பெற்றோர்கள் ஏற்கனவே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.