கனடாவிலிருந்து யாழ். வந்த யுவதி உயிரிழப்பு..!
கனடாவில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவர் சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (05) உயிரிழந்துள்ளார்.
கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி - கல்லுவம் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 05.09.2025 வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் நாளை(8) திங்கட்கிழமை கல்லுவத்தில் உள்ள அன்னாரின் பூர்வீக வீட்டில் இடம்பெறவுள்ளது.
குறித்த சிறுமியின் திடீர் மரணத்தால் வடமராட்சி கல்லுவம் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
