முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் இளம் யுவதி பலி
வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து கேகாலை மாவட்டம், ருவான்வெல்லை பிரதேசத்தில் நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட நால்வர் பயணித்தனர் எனவும், விபத்தின் போது சாரதியும், இரண்டு பயணிகளும் காயங்களுடன் உயிர் தப்பினர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயங்களுடன் உயிர் தப்பிய இரு பயணிகளும் உயிரிழந்த இளம் யுவதியின் உறவினர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் வறக்கப்பொலையைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த இரு உறவினர்களும், முச்சக்கர வண்டி சாரதியும் ருவான்வெல்லை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 2 மணி நேரம் முன்

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam

IQ Test: இரண்டில் ஏழை குடும்பம் எது? மூளையை சலவைச் செய்து கண்டுபிடிங்க.. 5 வினாடிகள் மட்டுமே! Manithan
