ஈரானிய ஆட்சி இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
தெஹ்ரான் பகுதியில் உள்ள ஈரானிய ஆட்சி இராணுவ இலக்குகளை இஸ்ரேலிய இராணுவம் தற்போது தாக்கி வருவதாக அந்நாட்டு இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய விமானப்படை தனது எக்ஸ் தள பதிவில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னதாக இஸ்ரேலிய தாக்குதல்களால் குறிவைக்கப்பட்ட கராஜில் உள்ள பயாம் விமான நிலையத்திற்கு அருகில் வெடிப்புகள் நடந்ததாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் "ஈரானிய ஆட்சியின் உள்நாட்டு பாதுகாப்பு தலைமையகத்தை அழித்துவிட்டன" என்று இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
சைபர் தாக்குதல்
மேலும், தெஹ்ரானின் கிழக்குப் பகுதியிலிருந்து வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஈரானின் குறைந்தது இரண்டு வங்கிகள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை ஈரானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சைபர் உள்கட்டமைப்பு சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தற்காலிக இணைய கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்றும் ஈரானிய தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
