வவுனியாவில் விபரீத முடிவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி
வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று (07) காலை வவுனியா நகருக்கு சென்ற நிலையில் தனிமையில் இருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டிற்கு வந்த போது குறித்த இளம் யுவதி வீட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக குறித்த யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட போதும், குறித்த யுவதி மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மணிபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய தங்கவேல் திவியா என்ற ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரியும் யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
