பல்கலைக்கழகம் செல்ல தயாராக இருந்த யுவதி உறக்கத்திலேயே மரணம்
தலத்துஓயா உடுவெல பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மொனராகலையைச் சேர்ந்த 22 வயதான சந்துனி ஹன்சமலி பண்டார என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவ்வப்போது சலி காய்ச்சலுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாலும், அவருக்கு வேறு எந்த நோயும் இல்லாத நிலையில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை புறம்தள்ளும் இந்தியா: சீனாவை எதிர்க்கும் பின்னணியில் அமெரிக்கா(Video)
உறக்கத்தில் மரணம்
மகளும் தாயும் மட்டுமே சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்துள்ளனர். தந்தை தொழிலுக்காக வெளியூர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகளிடம் அசைவுகள் இல்லாதமையால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இறந்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பீடத்தில் நுழையப் போவதாகவும், அதற்கான ஆடைகளையும் தயார் செய்ததாகவும் தாய் குறிப்பிட்டார்.
மூளையில் இரத்தம்
இம்மாணவியின் பிரேத பரிசோதனை கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்டதுடன், மூளையில் இரத்தம் உறைந்தமையே மரணத்திற்கான காரணம் என சட்ட வைத்தியர் தெரிவித்துள்ளனர்.
தலத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
