மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு!
புத்தளம் - மதுரங்குளியில் மின்சாரம் தாக்கி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ரெட்பானா - புழுதிவயல் பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(07.11.2023) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
உயிரிழந்த பெண் பாலாவி - புழுதிவயல், ரெட்பானா பகுதியைச் சேர்ந்த மரிக்கார் பாத்திமா சாபிகீன் (வயது 38) எனும் ஒரு பிள்ளையின் தாய் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வீட்டில் மின்சார தேவைக்காக மின் வடத்தை எடுத்து கையாளுகையிலேயே இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளம் பெண்ணை, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரங்குளி பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், மரண விசாரணையை நடத்தியள்ளார்.

அத்துடன், இன்று மாலை உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டது.
மின்சாரம் தாக்கியமையால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam