மருத்துவமனையின் தவறால் உயிரிழந்த யுவதி : அதிர்ச்சியில் பெற்றோர்
பண்டாரவளையில் யுவதி ஒருவரின் மரணத்திற்கு மருத்துவமனை அதிகாரிகள் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீண்ட நாட்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த யுவதிக்கு உரிய சிகிச்சையளிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
மேலதிக சிகிச்சை
17 ஆம் திகதி காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கும் அவருக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை எனவும், பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிப்பதில் கூட தாமதம் ஏற்பட்டதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.
தனது மகளின் உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கூட அனுமதிக்கப்படவில்லை என்று அவரது தாயார் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். சரியான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்.
மருத்துவமனையின் தவறு காரணமாக மகளை இழந்துவிட்டோம் என தாயார் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த யுவதி இம்முறை உயர்தர பரீட்சை எழுதுவதற்கு தயாராக இருந்ததாக பெற்றோர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.