முல்லைத்தீவில் கஞ்சாவுடன் இளம் பெண் கைது
முல்லைத்தீவில் கேரளா கஞ்சாவுடன் தாழையடி பகுதியினை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (11.03.2024) காலை முல்லைத்தீவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் இராணுவத்தினர், விசேட அதிரடி படையினர், பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
மன்னாரிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்தினை வழிமறித்து சோதனையை மேற்கொண்ட போது பெண்ணிடமிருந்த கைப்பையில் 500 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டள்ளது.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
