வவுனியாவில் இளம் தாயும் இரு பிள்ளைகளும் மாயம்: கணவன் முறைப்பாடு
வவுனியா - கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரையும் அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் 32 வயதான அ.அபிராமி என்னும் பெயருடைய தனது மனைவி,பிள்ளைகளான கம்சனா (வயது 11), சன்சிகன் (வயது 8) ஆகிய இருவரையும் கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
எனினும், குறித்த இரு மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை எனவும் மனைவியும் வீடு திரும்பாத நிலையில் கணவரும், உறவினர்களும் பல இடங்களிலும் தேடிய நிலையில் கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பான தகவல் கிடைத்தோர் 076-5273860 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது வவுனியா பொலிஸாருக்கோ தெரியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri