கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் : ஐந்து பேர் கைது - வாகனங்கள் பறிமுதல்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Crime Arrest
By Bavan Mar 22, 2026 01:26 PM GMT
Report

புதிய இணைப்பு

மட்டக்களப்பு -  கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இரண்டு முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைதுசெய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடனும் தொடர்பு கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல் - குமார்

கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் : ஐந்து பேர் கைது - வாகனங்கள் பறிமுதல் | Young Mother Rescued Alive From Well Investigation

இரண்டாம் இணைப்பு

 மட்டக்களப்பு  - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்றைய தினம் பெண் ஒருவரும், மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுளள்ன.

இதற்கமைய, நெல்லிக்காடு கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை

குறித்த கிணற்றினுள் மேலும் ஏதேனும் சடலங்கள் இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற கட்டளைக்கமைவாக மண்முனை தென்மேற்குப் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னத்துடன் கிணறு சோதனைக்காக நீர் இறைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் : ஐந்து பேர் கைது - வாகனங்கள் பறிமுதல் | Young Mother Rescued Alive From Well Investigation 

இதேவேளை சோதனையின் போது கிணற்றினுள் இருந்து வேறு எவ்வித சடலங்களோ மீட்கப்படவில்லை என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு மற்றும் வெல்லாவெளி ஆகிய மூன்று பொலஸ் நிலையங்களும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசேட பொலிஸ் குழுக்களினூடாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு - வவுனியா சொகுசு பேருந்தில் பயணம் செய்தவர் திடீரென மரணம்

கொழும்பு - வவுனியா சொகுசு பேருந்தில் பயணம் செய்தவர் திடீரென மரணம்

இதேநேரம் மீட்கப்பட்ட சடலம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40 ஆம் கிராமம், வம்மியடியுற்றினை சேர்ந்த 45 வயதுடைய ரவி நளாயினி என்பவருடையதாக இருக்கலாம் என உறவினர்களினால் அவரது பாதணிகளை வைத்து அடையாளம் காணப்பட்ட போதிலும் பிரேத பரிசோதனையின் பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் : ஐந்து பேர் கைது - வாகனங்கள் பறிமுதல் | Young Mother Rescued Alive From Well Investigation

கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் : ஐந்து பேர் கைது - வாகனங்கள் பறிமுதல் | Young Mother Rescued Alive From Well Investigation

கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் : ஐந்து பேர் கைது - வாகனங்கள் பறிமுதல் | Young Mother Rescued Alive From Well Investigation

மேலதிக தகவல் - குமார்

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பு - தாந்தாமலை, நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண் தொடர்பான விசாரணையில் பெண்ணைக் கடத்தி மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

மாவட்ட புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் 24 மணித்தியாலத்தில் காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் கணவனின் தம்பி உட்பட 3 பேரை நேற்றிரவு (21) வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.  

எரிபொருள் விலை உயர்வு! இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவி்ப்பு

எரிபொருள் விலை உயர்வு! இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவி்ப்பு

வாக்குமூலத்தில் வெளியான தகவல்

அத்துடன் குறித்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்ட பெண்ணையும் இதே பணியில் அவர்கள் செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் : ஐந்து பேர் கைது - வாகனங்கள் பறிமுதல் | Young Mother Rescued Alive From Well Investigation

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை (19) வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு இரண்டரை வயது குழந்தையுடன் சென்ற இளம் தாய் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (20) இளம் தாய் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரது குழந்தை வயல் பகுதியில் கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டதுடன், கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித்த லீலா ரத்தின தலைமையில் கொக்கட்டிச்சோலை வவுணதீவு, ஆயித்தியமலை, வெல்லாவெளி, மட்டு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் விசேட குற்ற விசாரணைப் பிரிவு, மாவட்ட புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து இரவு பகலாக தீவிர விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சிசிடிவி கமராவில் பதிவாகிய காணொளி படங்களை பரீட்சித்த போது குறித்த இளம் தாயை ஏற்றி சென்ற முச்சக்கரவண்டி மற்றும் அவருடன் வந்த பெண் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு குறித்த பெண் மற்றும் முச்சக்கர வண்டி தொடர்பாக கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து அதன் பொறுப்பதிகாரி தலைமையில் புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து வந்தாறுமூலை - ஆலையடி வீதியில் உள்ள வீடு ஒன்றை நேற்றிரவு 7.00 மணியளவில் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.  

எரிபொருள் சிக்கல்! பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் சிக்கல்! பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

சந்தேகநபர்கள் கைது

 இதன்போது  அங்கு ஒழிந்திருந்த வவுணதீவு காஞ்சிரம்குடா வைச் சேர்ந்த 26 வயதுடைய சோமசுந்தரம் சர்லியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த பெண்ணின் கணவரான காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த 34 வயதுடைய வெற்றிவேல் சதீஸ்வரன், அவரது தம்பியான 22 வயதுடைய வெற்றிவேல் தனோஜன் ஆகிய இருவரையும் வவுணதீவில் வைத்து கைது செய்ததுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியை மீட்டனர். 

கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் : ஐந்து பேர் கைது - வாகனங்கள் பறிமுதல் | Young Mother Rescued Alive From Well Investigation

இதில் கைது செய்யப்பட்ட கணவன், மனைவி சம்பவ தினமான வியாழக்கிழமை வந்தாறு மூலையில் அவர்களது வீட்டில் இருந்து கொக்கட்டிச்சோலை பகுதிக்கு சென்று பின்னர் ஆயித்தியமலை பகுதி சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது வவுணதீவு பிரதேச செயலக காரியாலயத்துக்கு முன்னால் குழந்தையுடன் பேருந்துக்கு காத்திருந்த இளம் தாயை கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்தி எற்றிச்சென்றுள்ளனர்.

இளம் தாயையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு நகரை நோக்கி பிரயாணித்த போது குழந்தையின் ஈடு வைத்த தங்க நகையை மீளப் போவதாக தெரிவித்த தாய் நகரை வந்தடைந்தும் குழந்தையுடன் இறங்கியுள்ளார்.குறித்த பெண் தானும் வருவதாக தெரிவித்து பின் தொடர்ந்து சென்ற நிலையில், அங்கு அவர் ஈடு வைத்த தங்க நகையை மீட்டெடுத்துக்கொண்ட பின்னர் மீண்டும் வவுணதீவு போவதாகவும் குறைந்த கட்டணத்தில் கொண்டு சென்று விடுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனைதொடர்ந்து குறித்த முச்சக்கரவண்டி வலையிறவு பாலத்தை கடந்து தாண்டியடி நோக்கிசென்ற போது களிர்பான போத்தலை கொடுத்து மயக்கமடைய செய்து அவரது கழுத்தில் கிடந்த 5 பவுண் தாலிக்கொடி மற்றும் ஒரு பவுண் தங்க சங்கிலியை கொள்ளையடித்துள்ளனர்.

இதன்பின்னர் குழந்தையை கொத்தியவலை வயல்பகுதியில் இறக்கிவிட்டு குறித்த பெண்ணை பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை ஈடுவைத்து பணம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் கறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்த பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். 

ஈரானின் ஏவுகணை தாக்குதல்! இஸ்ரேலில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

ஈரானின் ஏவுகணை தாக்குதல்! இஸ்ரேலில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி



GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US