கொழும்பு - வவுனியா சொகுசு பேருந்தில் பயணம் செய்தவர் திடீரென மரணம்
கொழும்பு - வவுனியா சொகுசு பேருந்தில் பயணம் செய்த குடும்பஸ்தர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
இன்று (22) அதிகாலை கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப்பயணித்த தனியார் சொகுசு பேருந்தில் குறித்த நபர் பயணம் செய்துள்ளார்.
வவுனியா பொலிஸார் விசாரணை
இதன்போது பேருந்து வவுனியாவை அடைந்த நிலையில் அவரது நிலை தொடர்பாக சந்தேகம் அடைந்த பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் பேருந்தை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பகுதியில் இருந்து குறித்த பேருந்தில் ஏறிய, மட்டக்களப்பு ,கல்முனை பகுதியை சேர்ந்த அலாவுதீன் வயது 55 என்ற நபரே மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri