தன்னைத் தானே சுட்டுக் கொண்ட இளைஞன்
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்ராசன் புர, 93ஆம் கட்டை பகுதியில் வசித்துவந்த 34 வயதான இளைஞர் ஒருவர், தான் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த போதைப்பொருள் பழக்கத்தால் தூண்டப்பட்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை (22.09.2025 )எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீண்டகாலமாக போதைப்பொருளுக்கு
துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அவரை மீட்ட அயலவர்கள் உடனடியாக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த இளைஞர் நீண்டகாலமாக போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தவர் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து கந்தளாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 6 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri
ஈஸ்வரியை அசிங்கமாக பேசிய அன்புக்கரசி, கழுத்தை பிடித்த தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam