வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம்! ஐவர் கைது
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் 10 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டுத்தாக்குதலில் படுகாயடைந்து இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுபிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 26ஆம் திகதி வீரமுனையில் முன் விரோதம் காரணமாக 10 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பி சென்றிருந்த நிலையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் விசேட குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களை நாளை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைமறைவாகியுள்ள ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri