மகாவலி ஆற்றில் குதித்த இளைஞர் மாயம்
கண்டி - பேராதணைப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞர் ஆற்றில் குதித்த இடத்திலிருந்து பயண பையொன்று மீட்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை, மடிக்கணினி, 2 வங்கி அட்டைகள், பரீட்சை நுழைவுச்சீட்டு, பணப்பை மற்றும் ஒரு ஜோடி காலணி என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று(28) தெரிவித்துள்ளது.
தேடுதல் பணி

காணாமல் போனவர் புலகஹாபிட்டிய - அஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியில் பொலிஸார், கடற்படையின் உயிர்காக்கும்
படையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ள நிலையில் பேராதணைப் பொலிஸார்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.