வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்
வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (15) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் இருந்து ஏ9 வீதி ஊடாக வவுனியா நகரை நோக்கி பயணித்த மகேந்திரா பட்டா ரக வாகனம் வவுனியா விவசாய பண்ணை முன்பாக பயணித்துக் கொண்டிருந்த போது கார் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டது.
இதன்போது வவுனியா நகரில் இருந் ஏ9 வீதி ஊடாக ஓமந்தை நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
