மன்னாரில் கடலுக்கு நீராடச் சென்ற மூவருக்கு நேர்ந்த கதி
மன்னார் - பேசாலை கடலில் மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் (15.01.2026) நடந்த சம்பவத்தில், பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தைப் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காக சென்ற போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
விபத்து
நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், காணாமல் போயிருந்த ஒரு இளைஞனின் சடலம் நேற்று(15.01.2026) இரவு கரையொதுங்கிய நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் ,16 முதல் 18 வயதுடைய பேசாலை, வசந்தபுரம், உதயபுரம் கிராமங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam