மட்டக்களப்பில் சிறுமிக்கு ஒருவருடகாலமாக நடந்த கொடுமை! இளைஞன் கைது
மட்டு காத்தான்குடி பிரதேசத்தில் 16 வயது சிறுமியை ஒருவருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்த 23 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை நேற்று (09) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிறுமியின் தாயார் சுகயீனமுற்று இருப்பதனால் கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் சிறுமி 15 வயதாக இருக்கும் போதே சிறுமியின் எதிர்வீட்டில் உள்ள இளைஞனை திருமணம் முடிப்பதற்கு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த இளைஞன் திருமண பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் இருந்து கடந்த ஒருவருடகாலமாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்டுவந்த நிலையில் தற்போது சிறுமியை திருமணம் முடிக்க முடியாது என இளைஞர் மறுப்பு தெரிவித்ததையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெஸ்டர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
