மகளை சித்திரவதை செய்த இளம் தந்தை கைது- குற்றப் பார்வை
இலங்கையின் பல பகுதிகளில் குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அந்தவகையில், தனது மகளை சித்திரவதை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் பாட்டி, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கடந்த திங்கட்கிழமை மட்டக்குளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 வயதும் 11 மாத வயதுடைய சிறுமியொருவர் தந்தையினால் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்ச்சியான வாக்குவாதங்கள் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் சிறுமியை அவரது பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சந்தேக நபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பொலிஸார் நடத்திய விசாரணையில் சிறுமியை சித்திரவதை செய்து அதனை பதிவு செய்து மனைவிக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.
சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் ,சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப் பார்வை இதோ,



